Do not have a Cplus account?  Create an account

Log In

Stay logged in.
Can not access your account?

Google+

Sign in and start sharing with Google+

Only shared with the right people

Share some things with friends, others with some families but do not share anything to your boss!

Make your conversations come alive

Hangout make conversations come alive stockings photos, emoticons even group video calls for free!

Make your photos look better than ever

Automatic backup, organize, and improve your photos!

Do you know?

You can sign in to your Google+ account using your existing Google?

Results for keyword ""

Sign Up
Hangouts

மணல் கூரை

மணல் கூரை | தமிழ் பண்பாட்டுக் கூரை!

GO TO TOP


Latest topics

» யாகாவாராயினும் நா காக்க! - Movie First Look Poster
by மணல் கூரை Wed Jul 16, 2014 6:31 am

» அறிந்தும் அறியாமலும்...! - சுப. வீரபாண்டியன்
by மணல் கூரை Sat Jul 12, 2014 3:09 am

» மதுரைக் காண்டம் - துன்ப மாலை
by மணல் கூரை Thu Jun 26, 2014 8:39 pm

» மதுரைக் காண்டம் - ஆய்ச்சியர் குரவை
by மணல் கூரை Fri Jun 13, 2014 5:08 am

» கூகுள் பித்தன் - அறிமுகம்
by கூகுள் பித்தன் Wed Oct 02, 2013 5:54 pm

» Google Page Change 1 October 2013
by கூகுள் பித்தன் Wed Oct 02, 2013 5:42 pm

» இன்னும் அந்த க்ளப்ல சேரலையே..! - ப்ரியா ஆனந்த் ஏக்கம்
by மதுமிதா Mon Jun 03, 2013 8:33 am

» ஆர்யா என்னை மிரட்டினார்: நஸ்ரியா நாஸிம்
by மதுமிதா Mon Jun 03, 2013 8:27 am

» இசை பிறந்த இனிய நாள் இன்று...! -இசைஞானி 70
by மதுமிதா Mon Jun 03, 2013 8:19 am

» ஆந்திர சிறுமி பலாத்கார வழக்கு: அதிமுக ஒன்றிய செயலாளர் பொன். காமராஜ் கைது
by மதுமிதா Mon Jun 03, 2013 8:04 am

» சென்னையில் பலத்த மழை... கர்நாடக மழையால் மேட்டூருக்கு நீர்வரத்து
by மதுமிதா Mon Jun 03, 2013 7:57 am

» 15 வருடமாக, தினம் ஒரு உயிருள்ள தேள்... அலற வைக்கும் ஈராக் விவசாயி
by மதுமிதா Mon Jun 03, 2013 7:53 am

» மாணவி கடத்தல் வழக்கு: நான் எங்கும் ஓடிவிடவில்லை - நடிகை சனா கான்
by மதுமிதா Sat Jun 01, 2013 9:35 am

» சென்னை கொண்டு வரப்பட்டார் லீனா மரியா பால்... மருத்துவமனையில் கர்ப்பப் பரிசோதனை!
by மதுமிதா Sat Jun 01, 2013 9:24 am

» ராதிகா தலைமையில் புதிய அமைப்பு! பெப்சியிலிருந்து சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் விலகியது
by மதுமிதா Sat Jun 01, 2013 9:13 am

வணக்கம் Guest ! உங்களை அன்புடன் வரவேற்கின்றோம். நமது தளத்தில் இணைந்து நீங்களும் கட்டுரைகள் எழுதுங்கள். இன்றே பங்குபெறுங்கள்...
மதுரைக் காண்டம் - துன்ப மாலை

Thu Jun 26, 2014 8:31 pm by மணல் கூரை

அஃதாவது - கோவலன் கொலையுண்ட செய்தியைக் கேட்ட திருமாபத்தினியாகிய கண்ணகியாரின் துன்பத்தின் இயல்பினைக் கூறும் பகுதி என்றவாறு. இதன்கண் மாலை என்பது இயல்பு என்னும் பொருட்டு ஆதலால் இது தன்மையால் வந்த பெயர் என்க.

ஆங்கு,
ஆயர் முதுமகள் ஆடிய சாயலாள்
பூவும் புகையும் புனைசாந்துங் கண்ணியும்
நீடுநீர் வையை நெடுமா லடியேத்தத்
தூவித் துறைபடியப் போயினாள் மேவிக் 5
குரவை முடிவிலோர் ஊரரவங் கேட்டு
விரைவொடு வந்தாள் உளள்;
அவள்தான்,
சொல்லாடாள் சொல்லாடாள் நின்றாள்அந் நங்கைக்குச்
சொல்லாடும் சொல்லாடுந் தான்; 10

எல்லாவோ,
காதலற் காண்கிலேன் கலங்கிநோய் கைம்மிகும்
ஊதுலை தோற்க …


[ Full reading ]

Comments: 5

மதுரைக் காண்டம் - ஆய்ச்சியர் குரவை

Mon May 20, 2013 9:16 pm by மணல் கூரை

அஃதாவது - கண்ணகியை அடைக்கலம் பெற்ற மாதரி மனைக்கண் அம் மாதரியால் நன்கு பேணப்பட்டுக் கண்ணகியும் கோவலனும் அவ்விடைக்குல மடந்தையின் பூவலூட்டிய புனைமாண் பந்தர்க் காவற் சிற்றில் ஆகிய கடிமனையின்கண் இனிதிருந்து, மற்றை நாள் விடியற் காலத்தே கோவலன் கண்ணகியின் சீறடிச் சிலம்பில் ஒன்று கொண்டு அதனை விற்றற்கு மதுரைமா நகரின்கண் புகுவானாக; அற்றை நாள் விடியற் காலத்தே துயிலெழுந்த மாதரி தனது சேரியின்கண் தீ நிமித்தங்கள் பல நிகழ்ந்தமை கண்டு இச்சேரியின்கண் ஏதோ பெருந் தீங்கு நிகழ்தற்கு இவை அறிகுறியாம் என்றுட்கொண்டு, அத்தீங்கு நிகழாமைப் பொருட்டுத் தம் குலதெய்வமாகிய மாயோனை வாழ்த்தி ஏனைய ஆய்ச்சியருடன் குரவைக் கூத்தாடிய செய்தியைக் கூறும்பகுதி என்றவாறு; இது கூத்தாற் பெற்ற பெயர்.


Comments: 14

18 புராணங்கள்!

Mon May 20, 2013 9:21 pm by மணல் கூரை

பெரிய புராணங்களைப் பற்றிய விவரங்கள்!

1.பிரம்ம புராணம் 2.பத்ம புராணம் 3.விஷ்ணு புராணம் 4.சிவமகா புராணம் 5.லிங்க புராணம் 6.கருட புராணம் 7.நாரத புராணம் 8.பாகவத புராணம் 9.அக்னி புராணம் 10.கந்த புராணம் 11.பவிஷ்ய புராணம் 12.பிரம வைவர்த்த புராணம் 13.மார்க்கண்டேய புராணம் 14.வாமன புராணம் 15.வராக புராணம் 16.மச்ச புராணம் 17.கூர்ம புராணம் 18.பிரம்மாண்ட புராணம் 19.வாயு புராணம் 20.சூர்ய புராணம்

Comments: 0

மதுரைக் காண்டம் - கொலைக்களக் காதை

Mon May 20, 2013 8:39 pm by மணல் கூரை

அஃதாவது - மாதரி என்னும் இடைக்குல மடந்தை கவுந்தியடிகளார் அறிவுறுத்தியபடி கண்ணகியையும் கோவலனையும் தன் மனைக்கு அழைத்துச் சென்று ஆர்வத்துடன் அவர்க்கு வேண்டுவனவெல்லாம் வழங்கக் கண்ணகியும் தனது கைவன்மையால் இனிதுற உணவு சமைத்துக் கணவனுக்கு ஊட்டி அற்றைநாள் இரவின்கண் அங்கிருப்ப; மற்றை நாள் கோவலன் கண்ணகியின் சீறடிச் சிலம்பில் ஒன்றனை விற்றற் பொருட்டுக் கண்ணகியைத் தேற்றுரை பல கூறி வருந்தாதிருவென்று கூறிச் செல்பவன், மதுரை நகரத்துப் பீடிகைத் தெருவிலே பொற் கொல்லர் நூற்றுவர் பின் வரத் தன்னெதிர் வந்த பொற்கொல்லனைக் கண்டு தன் சிலம்பினை அவன்பால் காட்ட, அவன் பண்டு அரண்மனைச் சிலம்பைக் கவர்ந்து வைத்துக் கொண்டு இருந்தானாதலால் அச் சிலம்பே இச் சிலம்பென்றும் அதனைக் களவுகொண்ட கள்வனும் இவனே என்றும் அரசனுக்குக் காட்டி அப் பழியைக் கோவலன்மேல் சுமத்தத் துணிந்து கோவலனை நோக்கி இச் சிலம்பு அரசி அணிதற்குத் தகுந்த சிலம்பாதலின் யான் சென்று அரசனுக்கு அறிவுறுத்தி வருமளவும் இவ்விடத்திருப்பீர் என்று கூறிச் சென்றவன், பாண்டியன் நெடுஞ்செழியன் கோப்பெருந் தேவியின் ஊடல் தீர்க்கச் செல்வான் முன்சென்று வணங்கி, அரண்மனைச் சிலம்பைத் திருடிய கள்வன் அடியேன் குடிலில் அச் சிலம்புடன் வந்துளான் என்று சொல்ல, அதுகேட்ட பாண்டியன் ஒரு சிறிதும் ஆராய்தலின்றிக் காவலரைக் கூவி நீவிர் இப் பொற் கொல்லனுடன் சென்று அக் கள்வனைக் கொன்று அச் சிலம்பினை ஈண்டுக் கொணர்க என்று பணிப்ப, அவ்வாறே அக் காவலர் பொற்கொல்லனுடன் சென்று அவனால் காட்டப்பட்ட கோவலனைக் கண்டுழி இத்தகையோன் களவுஞ் செய்வனோ! என்று ஆராயும்பொழுது அக் காவலருள் கல்லாக் களிமகன் ஒருவன் தன் கை வாளால் கோவலனை எறிந்துழி, கோவலன் கொலையுண்ட செய்தியைக் கூறும் பகுதி என்றவாறு.


Comments: 18

மதுரைக் காண்டம் - அடைக்கலக் காதை

Mon May 20, 2013 8:20 pm by மணல் கூரை

அஃதாவது - கோவலன் கண்ணகியைக் கவுந்தியடிகளார் பால் ஓம்படை செய்து மதுரைமூதூர் புகுந்து ஆங்குப் பரத்தையர் வீதியும் அங்காடி வீதியும் பிற வீதிகளும் சந்தியும் சதுக்கமும் மன்றமும் கவலையும் மறுகும் திரிந்து அப் பேரூரைக் கண்டு மகிழ்ந்து மீண்டும் கண்ணகியும் அடிகளாரும் இருந்த புறஞ்சேரிக்கு வந்துற்றனனாக; அப்பொழுது, மாடலன் என்னும் மறையவன் குமரியாடி மீண்டு வருபவன் கோவலன் இருக்குமிடத்தை அடைந்தான்; கோவலன் அவனை வணங்க அம் மறையவன் கோவலனை முன்பே நன்கறிந்தவனாதலின் அவன் நிலைமை கண்டு கழிபேரிரக்கங் கொண்டு அவனது பண்டைய நிலையைப் பாரித்துரைத்து வருந்தியிருப்பப் பின்னர், அம் மறையவனும் கவுந்தியும் கோவலனை நோக்கி இவ்விடம் துறந்தோர்க்கே உரியதாகலின், நீ மதுரையில் புகுதுக என்று கூறும்பொழுது ஆயர் முதுமகளாகிய மாதரி என்பாள் அங்கு வந்து கவுந்தியடிகளைக் கண்டு வணங்கினள். அதுகண்ட கவுந்தியடிகள் சிறந்த குணம் உடையவளாகிய இம் மாதரியின்பால் கண்ணகியை இருத்துதல் குற்றமின்று என நினைத்து அம் மாதரிக்குக் கண்ணகியின் உயர்வையும் தவத்தோர் தரும் அடைக்கலப் பொருளைப் பாதுகாத்தலால் உண்டாகும் பயனையும் எடுத்துக்கூறி அவள்பால் கண்ணகியை அடைக்கலமாக ஒப்புவித்த செய்தியைக் கூறும் பகுதி என்றவாறு.


Comments: 17

மதுரைக் காண்டம் - ஊர்காண் காதை

Mon May 20, 2013 7:59 pm by மணல் கூரை

அஃதாவது - முற்காதையிற் கூறியவாறு கோவலன் முதலிய மூவரும் மதுரையின்கண் அறம்புரி மாந்தர் அன்றி மற்றோர் சேராத புறஞ்சேரி புகுந்த பின்னர்க் குணதிசையில் ஞாயிறு தோன்றிய பின்னர் அரண்மனைக்கண் காலைமுரச முழங்கிற்றாக, அதுகேட்ட கோவலன் தான் கருதிவந்த தொழில் தொடங்கற் பொருட்டு அந்நகரத்தினூடு புகுந்து அதற்கு ஆவனதேர்ந்து வருதற்குக் கண்ணகியைக் கவுந்தியடிகளார் காப்பினுள் வைத்துத் தான் தமியனாக அந்த நகரத்தினூடு புகுந்து ஆங்குள்ள வீதிகள் பலவற்றையும் சுற்றிப் பார்த்து அந்நகரத்தின் பேரழகைக் கண்டுமகிழ்ந்து மீண்டும் புறஞ்சேரிக்கு வந்த செய்தியைக் கூறும் பகுதி என்றவாறு.


Comments: 23

மதுரைக் காண்டம் - புறஞ்சேரியிறுத்த காதை

Mon May 20, 2013 7:40 pm by மணல் கூரை

அஃதாவது - உறந்தையினின்றும் மாமதுரைக்குச் செல்லும் கோவலனும் கண்ணகியும் கவுந்தியடிகளாரும் வெங்கதிர் வெயின் முறுகுதலாலே வழிநடை வருத்தந் தீர ஐயை கோட்டம் புக்கவர் ஆண்டுநிகழ்ந்த வேட்டுவவரிக் கூத்தைக் கண்ணுற்றுப் பாண்டியர் அருளாட்சி நிகழும் அந்த நாட்டிலே இரவினும் வழிப்போக்கர்க்கு ஏதம் சிறிதும் உண்டாகா தென்றறிந்த வாற்றால் படுகதிரமையம் பார்த்திருந்து இரவின்கண் திங்கள் தோன்றிப் பானிலா விரித்த பின்னர் அவ்விரவிலேயே மேலும் மதுரை நோக்கி நடந்து மதுரையின் மதிற் புறத்ததாகிய புறஞ் சேரியை எய்தி ஆண்டுத் தங்கிய செய்தியையும் அங்ஙனம் செல்லும்பொழுதில் இடையே நிகழ்ந்தவற்றையும் இயம்பும் பகுதி என்றவாறு.


Comments: 20

மதுரைக் காண்டம் - வேட்டுவ வரி

Mon May 20, 2013 7:22 pm by மணல் கூரை

அஃதாவது - வேட்டுவர்கள் கொற்றவையை வழிபாடு செய்து வாழ்த்திய வரிப்பாடல் என்னும் இசைத்தமிழ்ப் பாடல்களையுடைய பகுதி என்றவாறு. இதன்கண் கொற்றவையின் புகழ்பாடும் மறவர்கள் கூத்துமாடிப் பாடுதலாலே இது வரிக்கூத்து என்னும் நாடகத் தமிழுமாம் என்க.

இனி, இதன்கண் கோவலன் கண்ணகி கவுந்தியடிகள் ஆகிய மூவரும் இளைப்பாறி யிருத்தற் பொருட்டு அப் பாலைப் பரப்பில் குரவமும் மரவமும் கோங்கமும் வேங்கையும் விரவிய பூம்பொழில் நடுவணமைந்த கொற்றவை கோட்டம் புகுந்து ஆங்கொரு சார் இருந்தபொழுது அப்பாலைப் பரப்பில் வாழும் எயினர் சாலினியைக் கொற்றவைக்குரிய கோலங் கொள்வித்து அக் கோட்டம் புகுவாராக; தேவராட்டியாகிய சாலினிமேல் தெய்வம் ஏறி அடிபெயர்த்தாடிக் கண்ணகிமுற் சென்று அவனைப் பாராட்டுதலும் எயினர்கள் அத் தெய்வத்தைப் பரவிப்பாடும் இசைப்பாடல்களும் கற்போர்க்குக் கழிபேரின்பஞ் செய்வனவாம்.


Comments: 16

மதுரைக் காண்டம் - காடுகாண் காதை

Mon May 20, 2013 6:53 pm by மணல் கூரை

அஃதாவது - கோவலனும் கண்ணகியும் கவுந்தியடிகளாரும் உறையூரினின்றும் புறப்பட்டு மதுரை நோக்கிச் செல்பவர் பாண்டியனாட்டகத்தே புக்கு ஆங்கு ஊரிடையிட்ட காடு பல கண்டு சென்றதும் ஆங்குக் கண்டனவும் கேட்டனவும் பிறவும் கூறும் பகுதி யென்றவாறு.

Comments: 27

சிலப்பதிகாரம் - மதுரைக் காண்டம்

Mon May 20, 2013 6:52 pm by மணல் கூரை

அஃதாவது - பூம்புகார் நகரத்திருந்து முந்தை ஊழ்வினை கடைக்கூட்டுதலாலே கோவலன் கதிரவன் தோன்று முன்னமே கண்ணகியோடு இழந்த பொருளீட்டவெண்ணிப் புறப்பட்டவன் வழியிலே காவுந்தியடியைக் கண்டடிதொழுது, அவர் தம்மை வழித்துணையாகவும் பெற்று வருபவன், அந்நெறியில் ஏதந்தருவன இவை இவை என அறிவுறுத்திய கவுந்தியடிகளாரின் மொழி போற்றி, அவரோடும், தன் காதலியோடும் கழனிச் செந்நெற்கரும்பு சூழ் பழனத்தாமரைப் பைம்பூங் கானத்தே பறவைகள் பாடும் பாட்டும், கருங்கைவினைஞரும் களமரும் கூடி ஆரவாரிக்கும், ஆரவாரமும், சின்மொழிக் கடைசியர் கள்ளுண்டு களித்துப்பாடும் விருந்துறு பாடலும், …


[ Full reading ]

Comments: 0

புகார்க் காண்டம் - நாடுகாண் காதை

Wed May 08, 2013 5:11 am by மணல் கூரை

அஃதாவது - கோவலனும் கண்ணகியும் கனைசுடர் கங்குல் கால் சீயாமுன்னர் ஊழ்வினை உண்ணின்று செலுத்துதலாலே மாடமதுரை நகர்க்குச் செல்லும்பொருட்டுக் காவிரியின் வளங்கெழுமிய வடகரை வழியாகக் குடதிசை நோக்கிப் போகும் பொழுது காவிரி நாட்டின் கவினும் வளமும் கண்டு கண்டுவந்து தலமூதாட்டியாகிய கவுந்தியடிகளாரையும் வழித்துணையாய்ப் பெற்றுச் செல்வதனைக் கூறும் பகுதி என்றவாறு.

Comments: 18

புகார்க் காண்டம் - கனாத்திறம் உரைத்த காதை

Wed May 08, 2013 4:56 am by மணல் கூரை

அஃதாவது - கண்ணகி நல்லாள் தன் தோழியாகிய தேவந்தி என்னும் பார்ப்பன மகளின்பால் தான் முன்னாளிரவு கண்ட கனவினது தன்மையைக் கூறிய செய்தியைக் கூறும் பகுதி என்றவாறு. இதன்கண் தேவந்தியின் வரலாறும் கோவலன் கண்ணகியை எய்தியதும் பிறவும் கூறப்படும்.

Comments: 7

புகார்க் காண்டம் - வேனிற்காதை

Wed May 08, 2013 4:34 am by Admin

அஃதாவது - கோவலனுக்கு முற்பிறப்பிற் செய்த பழவினை மாதவி பாடிய யாழிசைமேல் வைத்து வந்துருத்ததாகலின் அவ்வுவ வுற்ற திங்கண் முகத்தாளை வெறுத்துத் தன் ஏவலருடன் போயபின்னர் அப்பருவம் தானும் வேனிற் பருவமாகலின் காதலனுடனன்றித் தமியளாய் ஆயத்தோடு தன் மனைபுகுந்த மாதவி அவனது பிரிவாற்றாமையாலே பட்ட துன்பத்தையும் அதனை ஆற்றியிருத்தற்கு அவள் செய்த செயல்களையும் கூறுகின்ற பகுதி என்றவாறு.


Comments: 9

புகார்க் காண்டம் - கானல் வரி

Sat Apr 20, 2013 11:05 am by மணல் கூரை

அஃதாவது - நெய்தலங்கானலின்கண் வெண்காலமளி மிசையிருந்து கானல்வரி என்னும் இசைப்பாவினைப் பாட அப்பாட்டின் வழியாக அவ்விருவர்க்கும் ஊழ்வினை உருத்துவந்தூட்டத் தொடங்கியதனைக் கூறும் பகுதி என்றவாறு. வரிப்பாடல் பிறவும் உளவாயினும் சிறப்புக்கருதி, கானல்வரி எனக் குறியீடு செய்தருளினர் என்றுணர்க.

(கட்டுரை)

அஃதாவது - பொருள் பொதிந்த உரைநடையா லியன்ற செய்யுள் என்றவாறு.

சித்திரப் படத்துள்புக்குச் செழுங்கோட்டின் மலர்புனைந்து
மைத்தடங்கண் மணமகளிர் கோலம்போல் வனப்புஎய்திப்
பத்தரும் கோடும் ஆணியும் நரம்பும்என்று
இத்திறத்துக் குற்றம்நீங்கிய யாழ்கையில் …


[ Full reading ]

Comments: 10

புகார்க் காண்டம் - கடலாடு காதை

Sat Apr 20, 2013 11:00 am by மணல் கூரை

(நிலைமண்டில ஆசிரியப்பா)

(விளக்கம்) அஃதாவது - வெள்ளி மால்வரை வியன் பெருஞ் சேடி விச்சாதரனை யுள்ளிட்ட தேவர்களும் கரந்துரு வெய்தி வந்து காண்குறூஉம் இந்திரவிழா நிறைவேறாநின்ற உவா நாளிலே புகார்நகரத்து அரசிளங் குமரரும் உரிமைச் சுற்றமும் ஆடுகள மகளிரும் பாடுகள மகளிரும் கடற்கரை யிடத்தே வந்து கூடிக் கடலாடுதலும் மாதவியும் கோவலனும் அக் கடல் விளையாட்டைக் கண்டு மகிழ்வான் போந்து ஆங்குக் கடற்கரையிலே புன்னை நீழற் புதுமணற் பரப்பில் படவீடமைத்துத் தங்குதலும் பிறவும் கூறும் பகுதி யென்றவாறு.

வெள்ளி மால்வரை வியன்பெருஞ் சேடிக்
கள்அவிழ் பூம்பொழில் காமக் கடவுட்குக்


[ Full reading ]

Comments: 7

புகார்க் காண்டம் - இந்திரவிழவூரெடுத்த காதை

Sat Apr 20, 2013 10:51 am by மணல் கூரை

(நிலைமண்டில ஆசிரியப்பா)

அஃதாவது புகார் நகரத்தே இந்திரனுக்கு விழா நிகழ்த்திய செய்தியும் பிறவும் கூறும் பகுதி என்றவாறு.

அலைநீர் ஆடை மலைமுலை ஆகத்து
ஆரப் பேரியாற்று மாரிக் கூந்தல்
கண்அகன் பரப்பின் மண்ணக மடந்தை
புதைஇருள் படாஅம் போக நீக்கி
உடைய மால்வரை உச்சித் தோன்றி 5

உலகுவிளங்கு அவிர்ஒளி மலர்கதிர் பரப்பி,
வேயா மாடமும், வியன்கல இருக்கையும்,
மான்கண் காதலர் மாளிகை இடங்களும்,
கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும்
பயன்அறிவு அறியா யவனர் இருக்கையும், 10

கலம்தரு திருவின் புலம்பெயர் மாக்கள்
கலந்துஇருந்து உறையும் இலங்குநீர் வரைப்பும்,
வண்ணமும் சுண்ணமும் …


[ Full reading ]

Comments: 9

புகார்க் காண்டம் - அந்திமாலைச் சிறப்புசெய் காதை

Sat Apr 20, 2013 10:48 am by மணல் கூரை

(நிலைமண்டில ஆசிரியப்பா)

அஃதாவது - கோவலன் மாமலர் நெடுங்கண் மாதவிக்கு அவள் பரிசிலாகப் பெற்ற மாலைக்கு நூறுபத்தடுக்கி யெட்டுக் கடை நிறுத்த வீறுயர் பசும்பொன் விலையாகக் கொடுத்து வாங்கிக் கூனிதன்னொடு சென்று அம்மாதவி மனைபுகுந்து அணைவுறுதற்கியன்ற அந்த நாளினது அந்திமாலைப் பொழுது முதலிய கங்குற் பொழுதுகளை (நூலாசிரியர்) கிளந்தெடுத்துப் புனைந்தோதிய பகுதி என்றவாறு.

(விளக்கம்) கோவலனை ஆகூழ்காரணமாகப் பெற்ற மாதவிக்கும், போகூழ் காரணமாகப் பிரியலுற்ற கண்ணகிக்கும் அற்றை நாள் தொடங்கிப் பொழுது கழியுமாற்றை ஆசிரியர் இளங்கோவடிகளார் நம்மனோர்க்கு அறிவுறுத்தக் …


[ Full reading ]

Comments: 4

புகார்க் காண்டம் - அரங்கேற்று காதை

Sat Apr 20, 2013 10:29 am by மணல் கூரை

அரங்கேற்று காதை:

(நிலைமண்டில ஆசிரியப்பா)

அஃதாவது - கண்ணகியும் கோவலனும் இல்லறம் நிகழ்த்தி வருங்காலத்தே புகார் நகரத்தே புகழ்மிக்க நாடகக் கணிகையாகிய மாதவி ஆடற்கலை பயின்று அரசன் முன்னிலையில் அரங்கேறிக் காட்டிய செய்தியையும் அவள் ஆடலினும் பாடலினும் அழகினு மயங்கிய கோவலன் அவளுடைய கேண்மையைப் பெற்ற செய்தியையும் கூறும் பகுதி என்றவாறு.

தெய்வ மால்வரைத் திருமுனி அருள
எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு
தலைக்கோல் தானத்துச் சாபம் நீங்கிய
மலைப்புஅருஞ் சிறப்பின் வானவர் மகளிர்
சிறப்பிற் குன்றாச் செய்கையொடு பொருந்திய 5

பிறப்பிற் குன்றாப் பெருந்தோள் மடந்தை


[ Full reading ]

Comments: 16

புகார்க் காண்டம் - மனையறம்படுத்த காதை

Sat Apr 20, 2013 10:26 am by மணல் கூரை

மனையறம்படுத்த காதை

(நிலைமண்டில ஆசிரியப்பா)

உரைசால் சிறப்பின் அரைசுவிழை திருவின்
பரதர் மலிந்த பயம்கெழு மாநகர்
முழங்குகடல் ஞாலம் முழுவதும் வரினும்
வழங்கத் தவாஅ வளத்தது ஆகி
அரும்பொருள் தருஉம் விருந்தின் தேஎம் 5

ஒருங்குதொக் கன்ன உடைப்பெரும் பண்டம்
கலத்தினும் காலினும் தருவனர் ஈட்டக்
குலத்திற் குன்றாக் கொழுங்குடிச் செல்வர்
அத்தகு திருவின் அருந்தவம் முடித்தோர்
உத்தர குருவின் ஒப்பத் தோன்றிய 10

கயமலர்க் கண்ணியும் காதல் கொழுநனும்
மயன்விதித் தன்ன மணிக்கால் அமளிமிசை
நெடுநிலை மாடத்து இடைநிலத்து இருந்துழிக்
கழுநீர் ஆம்பல் முழுநெறிக் குவளை
அரும்புபொதி …


[ Full reading ]

Comments: 8

சிலப்பதிகாரம் - புகார்க் காண்டம்

Sat Apr 20, 2013 10:06 am by மணல் கூரை

1. மங்கல வாழ்த்துப் பாடல்:

(சிந்தியல் வெண்பாக்கள்)

திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கலர்த்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ்
வங்கண் உலகுஅளித்த லான்.
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு 5

மேரு வலம்திரி தலான்.
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி உலகிற்கு அவனளிபோல்
மேநின்று தாஞ்சுரத்த லான். பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும் 10

வீங்குநீர் வேலி உலகிற்கு அவன்குலத்தொடு
ஓங்கிப் பரந்துஒழுக லான். (மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா) ஆங்கு,
பொதியில் ஆயினும் இமயம் ஆயினும்
பதிஎழு அறியாப் …


[ Full reading ]

Comments: 14

சிலப்பதிகாரம்

Sat Apr 20, 2013 9:52 am by மணல் கூரை

இளங்கோஅடிகள் இயற்றிய சிலப்பதிகாரம்:

தமிழில் முதலில் தோன்றிய காப்பியம் சிலப்பதிகாரம் ஆகும். சிலப்பதிகாரத்தை இயற்றியவர் சேரன் செங்குட்டுவனின் சகோதரர் இளங்கோவடிகள் ஆவார். அரச பதவியை உதறிவிட்டு துறவறம் பூண்டு வாழ்ந்தவர் இளங்கோ அடிகள். இவர் கி. பி 2 ஆம் நூற்றாண்டில் பிறந்தவர் என்ற ஆதாரமாக செங்குட்டுவன் கண்ணகிக்கு கோயில் எடுத்து விழாக் கொண்டாடிய போது இலங்கை மன்னன் கயவாகு உடனிருந்தான் என்பதை இளங்கோவடிகளே கடல்சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும் நன்னாள் செய்த நாளினி வேள்வியும் (வரந்தரு காதை ) எனக் கூறியுள்ளார். கயவாகு மன்னனது ஆட்சி கி.பி 2-ஆம் நூற்றாண்டு என …


[ Full reading ]

Comments: 6

ஐம்பெரும் காப்பியங்கள்

Sat Apr 20, 2013 9:45 am by மணல் கூரை

ஐம்பெரும் காப்பியங்கள்:

1. சிலப்பதிகாரம்
2. மணிமேகலை
3. சீவக சிந்தாமணி
4. வளையாபதி
5. குண்டலகேசி


Comments: 1

ஐஞ்சிறு காப்பியங்கள்

Sat Apr 20, 2013 9:46 am by மணல் கூரை

ஐஞ்சிறு காப்பியங்கள்:

1. உதயண குமார காவியம்
2. நாக குமார காவியம்
3. யசோதர காவியம்
4. சூளாமணி
5. நீலகேசி


Comments: 0

Social bookmarking
Social bookmarking reddit      

Bookmark and share the address of மணல் கூரை on your social bookmarking website

Style of Google. Code by SkinOne