Do not have a Cplus account?  Create an account

Log In

Stay logged in.
Can not access your account?

Google+

Sign in and start sharing with Google+

Only shared with the right people

Share some things with friends, others with some families but do not share anything to your boss!

Make your conversations come alive

Hangout make conversations come alive stockings photos, emoticons even group video calls for free!

Make your photos look better than ever

Automatic backup, organize, and improve your photos!

Do you know?

You can sign in to your Google+ account using your existing Google?

Results for keyword ""

Sign Up
Hangouts

மணல் கூரை

மணல் கூரை | தமிழ் பண்பாட்டுக் கூரை!

GO TO TOP


You are not connected. Please login or register

View previous topic View next topic Go down  Message [Page 1 of 1]

1இலக்கியப் பார்வை Empty இலக்கியப் பார்வை Wed May 22, 2013 4:07 pm

மணல் கூரை

மணல் கூரை
மணல் கூரை

மணல் கூரை

பதிவுகள் : 378

பதிவின் தரம் : 376

பதிவு விருப்பம் : 268

இணைந்தது : 06/04/2013


V.I.P MEMBER

V.I.P MEMBER
இளைய வாசகர்களே! இலக்கிய வாசனையை நுகர ஆரம்பித்து விட்டால், நாவல்களைப் படிப்பது போல் நமது ஆர்வம் மேலிடும். நீங்கள் போட்டித்தேர்வுகளில் பங்கேற்கும் போது, அதற்கு பதிலளிக்கவும் உதவும். நமது புலவர்கள் நமக்காக அருளிச் சென்ற நூல்களைப் பற்றிய விபரத்தை இந்தப் பகுதியில் சுருக்கமாகப் பார்க்கலாம்.

* ஆசாரக்கோவை
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று ஆசாரக்கோவை. இதை எழுதியவர் பெருவாயின் முள்ளியார். “ஆசாரம்’ என்றால் “ஒழுக்கம்’. “ஆசாரம்’ என்ற வார்த்தையைப் பார்த்தவுடனேயே புரிந்திருக்கும்! இது சமஸ்கிருதச் சொல் என்று! ஆம்.. இந்நூலில் வடமொழிக் கருத்துக்களே அதிகமாகப் புதைந்துள்ளது. எம்மொழியானால் என்ன! நல்ல கருத்துக்களைச் சொல்கிறதே! எனவே, தமிழிலக்கியம் இந்நூலை ஏற்றுக்கொண்டுள்ளது. இந்நூலில் 101 பாடல்கள் உள்ளன. நன்றியறிதல், பொறுமை, இன்சொல், இன்னா செய்யாமை, கல்வி, ஒப்புரவு, அறிவு, நட்பு ஆகிய நற்பண்புகள் இதில் சொல்லப் பட்டுள்ளன. மேலும், இன்றும் நாம் வாழ்வில் கடைபிடிக்கும் நடைமுறைக் கருத்துக்கள் இதில் போதிக்கப்படுகின்றன. ஒருவர் வெளியே கிளம்பும் போது “எங்கே போகிறீர்கள்?’ எனக் கேட்கக்கூடாது. பின்னால் நின்று கூப்பிடக்கூடாது, பயணம் கிளம்பும் போது தும்மல் வந்தால் உடனே கிளம்பக்கூடாது ஆகிய ஆசாரக்கருத்துக்கள் இந்நூலில் உள்ளன.

* முத்தான முத்தல்லவோ.. முதிர்ந்த மூன்று முத்தல்லவோ..
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் முக்கியமானது திரிகடுகம். சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்று மருந்துப் பொருட்களும் சேர்ந்தது திரிகடுகம். இம்மூன்றும் நோய் போக்கும் தன்மையுடைவை போல, இந்த நூல்களிலுள்ள பாடல் ஒவ்வொன்றும் சொல்லும் மூன்று கருத்துகளும் மனிதனிடம் ஒழுக்கத்தையும், நற்பண்புகளையும் வளர்க்கும் என்பதால், இப்படி ஒரு பெயரை வைத்தார் இந்த நூலின் ஆசிரியர் நல்லாதனார். இதில், கடவுள் வாழ்த்தையும் சேர்த்து 101 பாடல்கள் உள்ளன. கடவுள் வாழ்த்துப் பாடலில் திருமாலை இந்த நூலாசிரியர் வணங்கியுள்ளார். இந்த நூலிலுள்ள 100 பாடல்களிலும் மூன்றாவது வரியில் ஒரு விசேஷம் உண்டு. என்ன தெரியுமா? மூன்றாம் அடியின் கடைசி வார்த்தை “இம்மூன்றும்’ அல்லது “இம்மூவர்’ என்று இருக்கும். இந்நூல் உணர்த்தும் நல்ல கருத்துக்களைப் பற்றி ஒரு சில வரிகளை உதாரணத்துக்குப் பார்ப்போமா!.
1. தோள்வற்றிச் சாயினும் சான்றாண்மை குன்றாமை- பலமிழந்து போனாலும் அல்லது வறுமை வந்தாலும் நற்குணங்கள் குறையக்கூடாது.
2. வருவாயுட் கால் வழங்கி வாழ்தல்- வருமானத்தில் கால் பகுதியை தானம் செய்.
3. நெஞ்சம் அடங்குதல் வீடாகும்- மனதைக் கட்டுப்படுத்தி வைத்தால் தான் வீடுபேறாகிய முக்தி கிடைக்கும்.
4. கண்ணுக்கு அணிகலன் கண்ணோட்டம்- கண்ணுக்கு அழகு தாட்சண்யம்
5. தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்- விடாமுயற்சியுள்ள உழைப்பாளிக்கு கடன் என்பதே இல்லை. இப்படி அருமையான கருத்துக்களைக் கொண்ட இந்த நூலை முழுமையாகப் படித்தால், இன்னும் எவ்வளவு நல்ல கருத்துக்களைத் தெரிந்து கொள்ளலாம்! படிப்பீர்களா!

* களவழி நாற்பது
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று “களவழி நாற்பது’. இதை பொய்கையார் என்ற புலவர் (சங்க கால பொய்கையார் அல்ல) பாடியுள்ளார். ஏர்க்களம் பாடுதல், போர்க்களம் பாடுதல் என இந்நூல் இருவகைப்படும். களவழி நாற்பது நூல் போர்க்களத்தைப் பற்றி பாடுகிறது. செங்கணான் சோழனுக்கும், சேரமான் இரும்பொறைக்கும் கடும் போர் ஏற்பட்டது. இதில் சேரமான் தோற்கடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். அவனை விடுதலை செய்ய வேண்டி, பொய்கையார் இந்தப் பாடல்களைப் பாடினார். இந்த நூலில் யானைப்போர் பற்றி சொல்லப்பட்டுள்ளது. கார்த்திகை திருவிழா அந்தக் காலத்திலேயே கொண்டாடப்பட்டது பற்றி இந்த நூலில் சொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

2இலக்கியப் பார்வை Empty இலக்கியப் பார்வை – 2 Wed May 22, 2013 4:09 pm

மணல் கூரை

மணல் கூரை
மணல் கூரை

மணல் கூரை

பதிவுகள் : 378

பதிவின் தரம் : 376

பதிவு விருப்பம் : 268

இணைந்தது : 06/04/2013


V.I.P MEMBER

V.I.P MEMBER
திவ்ய பிரபந்தத்தின் பிரிவுகள்

பிரபந்த நூலை 20 பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். முதல் மூன்று ஆழ்வார்களான பொய்கை, பூதத்தாழ்வார், பேயாழ்வார் பாடியவை முதல், இரண்டாம், மூன்றாம் திருவந்தாதி எனப்படும். பெரியாழ்வார் பாடியவை திருப்பல்லாண்டு மற்றும் பெரியாழ்வார் திருமொழி எனப்படுகிறது. ஆண்டாளுக்குரியவை திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி. குலசேகராழ்வாருக்குரியது பெருமாள் திருமொழி. திருமழிசையாழ்வார் எழுதியவை திருச்சந்த விருத்தத்தையும், நான்முகன் திருவந்தாதி எனப்படுகின்றன. தொண்டரடி பொடியாழ்வாருக்குரியவை திருமாலை மற்றும் திருப்பள்ளியெழுச்சி. திருப்பாணாழ்வார் எழுதியதை “அமலனாதிபிரான்’ என்றும், மதுரகவியாழ் வாருக்குரியது “கண்ணி நுண் சிறுதாம்பு’ என்றும் கூறப்படும்.

திருமங்கையாழ்வாருக்குரியது பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் ஆகியவை. நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் 20 பிரிவுகளில், திருவாய்மொழி என்ற பிரிவே பெரியது. இதில் 1102 பாசுரங்கள் உள்ளன. திருவெழுகூற்றிருக்கை என்ற பிரிவே மிகச்சிறியது. இதில் ஒரே ஒரு பாடல் தான் உண்டு. இந்த நூலுக்கு உரை எழுதியவர் பெரியவாச்சான்பிள்ளை. 108 திவ்யதேசங்களிலுள்ள பெருமாள்களைப் பற்றி ஆழ்வார்கள் தங்கள் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர். எனவே, அந்தத் தலங்கள் பக்தர்களால் மிகச்சிறப்பாகப் போற்றப்படுகின்றன.

தமிழ் வியாசரின் பிரபந்தம்

திருமாலுடைய மங்கல குணங்களைப் பற்றி ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பே நாலாயிர திவ்ய பிரபந்தம். “திவ்ய’ என்றால் “இனிமை’. “ப்ர’ என்றால் “தெய்வம்’. “பந்தம்’ என்றால் “உறவு’. இறைவனுடன் உள்ள உறவைக் குறித்து இனிமையாகப் பாடப்பட்ட நாலாயிரம் பாடல்களின் தொகுப்பே நாலாயிர திவ்ய பிரபந்தம் எனப்படுகிறது.
12 ஆழ்வார்கள் இந்தப் பாசுரங்களை (பாடல்) பாடியுள்ளனர். பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோர் தலா 100 பாடல்களும், திருமழிசையாழ்வார் 96 பாடல்களும், பெரியாழ்வார் 473 பாடல்களும், ஆண்டாள் 173 பாடல்களும், தொண்டரடிப் பொடியாழ்வார் 55 பாடல்களும், திருமங்கையாழ்வார் 1263 பாடல்களும், திருப்பாணாழ்வார் 10 பாடல்களும், குலசேகராழ்வார் 105 பாடல்களும், நம்மாழ்வார் 1296 பாடல்களும் பெருமாளைப் பற்றி பாடியுள்ளனர். மதுரகவியாழ்வார் பெருமாளைப் பாடாமல், தன் குருவான நம்மாழ்வாரைப் பற்றி 11 பாடல்கள் பாடியுள்ளார். இவர்கள் பாடிய பாடல்களைத் தொகுத்தவர் நாதமுனிகள். இவரை “தமிழ் வியாசர்’ என அழைப்பர்.

3இலக்கியப் பார்வை Empty இலக்கியப் பார்வை – 3 Wed May 22, 2013 4:10 pm

மணல் கூரை

மணல் கூரை
மணல் கூரை

மணல் கூரை

பதிவுகள் : 378

பதிவின் தரம் : 376

பதிவு விருப்பம் : 268

இணைந்தது : 06/04/2013


V.I.P MEMBER

V.I.P MEMBER
இலக்கிய இன்பம் குறவஞ்சி நூல்கள்:

சிற்றிலக்கியங்களில் நாடக வடிவில் அமைக்கப்பட்டவையே குறவஞ்சியும், பள்ளும் ஆகும். காதலனின் பிரிவுத்துயரை தாங்காமல் காதலி சிரமப்படும் போது, குறவர் குல பெண் அவளுக்கு குறி கூறி நல்ல செய்தியைக் கூறுவது குறவஞ்சி எனப்படும். இவ்வாறு குறி கூறும் பாடல்களை, குறத்திப்பாட்டு, குறவஞ்சி நாட்டியம், குறவஞ்சி நாடகம் என்றும் சொல்வர். குறவஞ்சி நூல்களில் முதன்மையானது குற்றாலக் குறவஞ்சி. குற்றால அருவியின் அழகு இந்த நூலில் வர்ணிக்கப்படுகிறது. குறிப்பாக “வானரங்கள் கனி கொடுத்து மந்தியொடு கொஞ்சும், மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்’ என்ற பாடல் மனதை மயக்குவதாக இருக்கும். அக்கால தமிழ் மாணவர்களுக்கு பள்ளிகளில் ஆசிரியர்கள் ராகத்துடன் சொல்லித் தருவார்கள். குற்றாலக் குறவஞ்சியை எழுதியவர் திரிகூட ராசப்பக் கவிராயர். இவர் குற்றாலம் அருகிலுள்ள மேலகரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். இந்த நூலைப் பாராட்டி, மதுரையை ஆண்ட முத்து விஜயரங்க சொக்கநாத நாயக்கர், கவிராயருக்கு “குறிஞ்சி மேடு’ என்ற இடத்தையே பரிசாகக் கொடுத்தார். இது தவிர, கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் எழுதிய சரபேந்திர பூபாலக் குறவஞ்சி, வேதநாயக சாஸ்திரிகள் இயற்றிய பெத்லகேம் குறவஞ்சி, குமரகுருபரர் எழுதிய மீனாட்சி அம்மைக்குறம் ஆகியவையும் குறவஞ்சி நூல்களில் குறிப்பிடத்தக்கவை.

பள்ளுப்பாட்டு:

சிற்றிலக்கியங்களில் நாடக வடிவில் அமைந்த மற்றொரு வகை பள்ளு நூல்களாகும். உழவுத்தொழில் செய்யும் விவசாயிகளின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டது இந்த நூல். கமலை ஞானப்பிரகாசர் எழுதிய திருவள்ளூர்ப் பள்ளு என்ற நூலும், ஆசிரியர் பெயர் தெரியாத முக்கூடற்பள்ளு என்ற நூலும் சுவை மிக்கவை. முக்கூடல் என்பது திருநெல்வேலி அருகிலுள்ள சீவலப்பேரி என்ற கிராமத்தைக் குறிக்கும். இங்கு பயிர்த்தொழில் செய்து வந்த உழவன் ஒருவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர். ஒருத்தி சைவத்தையும், மற்றொருத்தி வைணவத்தையும் தழுவியவர்கள். இந்த சக்களத்திகளுக்கு இடையே தங்கள் தெய்வங்களைப் பற்றி எழுந்த சிறு சர்ச்சையே இந்த நூலின் கருப்பொருள். முக்கூடற்பள்ளு படித்தால் இருபெரும் தெய்வங்களைப் பற்றிய சுவையான செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம்.

பதிகம் என்றால் என்ன?

ஒரு பொருளைப் பற்றி பத்து அல்லது 11 பாடல்களால் பாடுவது பதிகம் எனப்படும். தேவாரத்தில் மட்டும் 11 பாடல்கள் இருக்கும். ஒரு ஊரிலுள்ள சிவனைப் புகழ்ந்து பாடும் தேவார ஆசிரியர்கள், அந்தப் பாடலைப் பாடினால் என்ன பலன் கிடைக்கும் என்பதைக் கடைசிப்பாடலில் சொல்லியிருப்பார்கள். குறிப்பாக, சம்பந்தரின் பாடல்கள் அவரது பெயரிலேயே முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. காலத்தால் மிகவும் முற்பட்டதாகக் கருதப்படும் பதிகம், காரைக்கால் அம்மையாரின் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் (இரண்டு பதிகங்கள்) ஆகும்.

4இலக்கியப் பார்வை Empty இலக்கியப் பார்வை – 4 Wed May 22, 2013 4:12 pm

மணல் கூரை

மணல் கூரை
மணல் கூரை

மணல் கூரை

பதிவுகள் : 378

பதிவின் தரம் : 376

பதிவு விருப்பம் : 268

இணைந்தது : 06/04/2013


V.I.P MEMBER

V.I.P MEMBER
திருப்புகழ்:

திருப்புகழைப் பாடப்பாட வாய் மணக்கும் என்பர். புகழ் என்றாலே அது முருகப் பெருமானுக்குரிய திருப்புகழ் மட்டும் தான். அத்தகைய பெருமை மிக்க நூலைப் பாடிய புலவர் என்பதால் அருணகிரிநாதருக்கு “”வாக்கிற்கு அருணகிரி” “”கருணைக்கு அருணகிரி” என்று சிறப்புப் பெயர்கள் உண்டு. “”முத்தைத் திரு பத்தித் திருநகை” என்று முருகப்பெருமானே இவருக்கு முதன்முதலில் அடி எடுத்துக் கொடுத்தார் என்பர். தமிழில் சந்தநயத்தோடு பாடுவதற்கு திருப்புகழுக்கு இணையேதும் இல்லை. இவருடைய திருப்புகழ் பாடல்களில் 1008 சந்தங்கள் இடம்பெற்றுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பஞ்சபூத தலங்களில் அக்னித்தலமாகப் போற்றப்படும் திருவண்ணாமலையில் பிறந்த இவர், கோயில் கோபுரத்தின் மீதேறி தற்கொலை செய்ய முயன்ற போது, முருகப்பெருமான் அவரைத் தாங்கிப்பிடித்து காப்பாற்றினார். அந்த முருகனுக்கு “கம்பத்துஇளையனார்’ என்ற சன்னதி அங்கு அமைந்துள்ளது. திருப்புகழ் தவிர, கந்தரந்தாதி, கந்தரலங்காரம், கந்தரனுபூதி, வேல்விருத்தம், மயில்விருத்தம், உடற் கூற்று வண்ணம், திருவெழு கூற்றிருக்கை ஆகிய நூல்களையும் இவர் இயற்றியுள்ளார். தன்னைக் காப்பாற்றிய முருகனுக்கு நன்றி செலுத்தும் வகையில் வாழ்நாள் முழுவதும் குமரன் குடியிருக்கும் கோயில்களுக்கு சென்று பாடல்கள் பாடினார். 1307 திருப்புகழ் பாடல்கள் நமக்கு கிடைத்துள்ளன.

முருகனை முழுமுதற்கடவுளாக வணங்கினாலும், இவருடைய பாடல்களில்எல்லா தெய்வங்களைப் பற்றிய குறிப்பும் இடம்பெற்றுள்ளதைக் காணலாம். கந்தர்கலி வெண்பா ஸ்ரீவைகுண்டம் என்னும் ஊரில் சண்முக சிகாமணி கவிராயருக்கும் சிவகாமசுந்தரி அம்மையாருக்கும் பிறந்த தவச் செல்வர் குமரகுருபரர். பிறந்ததில் இருந்து ஐந்து வயது வரை பேசமுடியாமல் ஊமையாய் இருந்தார். திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சென்று முறையிட்டனர் பெற்றோர். கந்தனின் கடைக்கண் சிறுபிள்ளை குமரகுருவின் மீது பட்டது. செந்திலாண்டவன் அருளால் பேசும் திறன் மட்டுமின்றி கவிபாடும் ஆற்றல் வந்தது. பெற்றோரும் மற்றோரும் கவிபாடும் பிள்ளையைக் கண்டு வியந்தனர். அப்போது முருகனின் மீது பாடிய பாடலே கந்தர் கலிவெண்பாவாகும். இப்பாடல் மட்டுமில்லாமல், மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், நீதிநெறிவிளக்கம், திருவாரூர் நான்மணிமாலை, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ், சிதம்பர மும்மணிக்கோவை, மதுரைக்கலம்பகம், சிதம்பர செய்யுட்கோவை, பண்டார மும்மணிக்கோவை, சகலகலாவல்லிமாலை, காசிக்கலம்பகம் ஆகிய நூல்கள் இவரால் எழுதப்பட்டவை.

5இலக்கியப் பார்வை Empty இலக்கியப் பார்வை – 5 Wed May 22, 2013 4:14 pm

மணல் கூரை

மணல் கூரை
மணல் கூரை

மணல் கூரை

பதிவுகள் : 378

பதிவின் தரம் : 376

பதிவு விருப்பம் : 268

இணைந்தது : 06/04/2013


V.I.P MEMBER

V.I.P MEMBER
காப்பியங்கள்தெய்வத்தையோ உயர்ந்த மக்களையோ கதைத் தலைவர்களாகக் கொண்ட நீண்ட செய்யுள், காப்பியம் என்று அழைக்கப்படுகிறது. சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, சீவக சிந்தாமணி, குண்டலகேசி ஆகியவை ம்பெருங்காப்பியங்கள் ஆகும். உதயண குமார காப்பியம்,நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகியவை ஐஞ்சிறு காப்பியங்கள் ஆகும். சிலப்பதிகாரமும் மணிமேகலையும் “இரட்டைக் காப்பியங்கள்’ என அழைக்கப்படுகின்றன. குண்டலகேசியும் நீலகேசியும் சமயப் பூசல் அடிப்படையில் தோன்றிய காப்பியங்கள் ஆகும். ஐம்பெருங்காப்பியங்கள் என்ற தொடரை முதலில் குறிப்பிட்டவர் மயிலைநாதர் (நன்னூல் உரையில்). ஐஞ்சிறு காப்பியங்கள் என்ற வழக்கினைத் தோற்றுவித்தவர் சி.வை. தாமோதரன் பிள்ளை.

மூன்று நகரங்களின் கதை:

தமிழில் தோன்றிய முதல் காப்பியம் சிலப்பதிகாரம். இயற்றியவர் இளங்கோவடிகள். சிலம்பு+அதிகாரம்= சிலப்பதிகாரம். கதையில் வரும் திருப்ப நிகழ்ச்சிகளுக்கெல்லாம் கண்ணகி, பாண்டிமாதேவி ஆகியோரின் கால் சிலம்புகள் காரணமாக இருப்பதால் இப்பெயர் ஏற்பட்டது.
மலைவளம் காணச் சென்ற சேரன் செங்குட்டுவனிடம் குன்றக் குரவர்கள் கூறிய கண்ணகி பற்றிய செய்தி, அதைத் தொடர்ந்து புலவர் சாத்தனார் கூறிய கண்ணகியின் வரலாறு ஆகியவை தான் சிலப்பதிகாரம் தோன்றக் காரணமாகும். முத்தமிழ்க் காப்பியம், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், குடி மக்கள் காப்பியம், மூன்று நகரங்களின் கதை என சிலப்பதிகாரத்திற்கு வெவ்வேறு பெயர்கள் உண்டு.

இக்காப்பியம் புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என 3 காண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 3 காண்டங்களும் 30 காதைகளாக (கதை தழுவிய செய்யுள் பகுதிக்கு காதை எனப் பெயர்) பிரிக்கப் பட்டுள்ளது. “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’( அரசியலில் தவறு செய்தால் தர்மமே எமனாகும்), “உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்’, ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்’என முப்பெரும் உண்மைகளைக் கூறுவதே சிலப்பதிகாரமாகும். பூம்புகாரில் இருந்த ஐவகை மன்றங்கள் (வெள்ளிடை மன்றம், இலஞ்சி மன்றம், நெடுங்கல் நின்ற மன்றம், பூத சதுக்க மன்றம், பாவை மன்றம்) பற்றியும், நாட்டிய அரங்கின் அமைப்பு, திரை அமைப்பு, விளக்கு ஒளி அமைப்பு பற்றியும், மாதவி ஆடிய 11 ஆடல்கள் 8 வகை வரிக் கூத்தை பற்றியும் இந்தக் காப்பியத்தில் கூறப்பட்டுள்ளன. இதை எழுதிய இளங்கோவடிகளின் காலம் கி.பி. 2ம் நூற்றாண்டு. “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று ஓர் மணி ஆரம் படைத்த தமிழ்நாடு’ எனப் பாராட்டியவர் மகாகவி பாரதியார்.

ஜோதிடர் பாடிய பாடல்:

“”யாதும் ஊரே யாவரும் கேளிர்!” என்ற பாடல் வரியைத் தெரியாத யாரும் இருக்க முடியாது. அந்த வரிக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா? ”கணியன் பூங்குன்றனார்’ என்னும் புலவர். புறநானூறு என்னும் நூலை இயற்றியவர் இவர். இந்த நூலில், 192வது பாடலாக இது இடம் பெற்றுள்ளது. பூங்குன்றம் என்னும் ஊரைச் சேர்ந்தவர் என்பதால் இவருக்கு இப்பெயர். ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போதுள்ள “மகிபாலன்பட்டி’ என்ற ஊரே, அக்காலத்தில் பூங்குன்றம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். “கணியன்’ என்றால் “காலத்தைக் கணித்துச் சொல்லும் பஞ்சாங்கக்காரர்’ (ஜோதிடர்) என்று பொருள்.

6இலக்கியப் பார்வை Empty இலக்கியப் பார்வை – 6 Wed May 22, 2013 4:18 pm

மணல் கூரை

மணல் கூரை
மணல் கூரை

மணல் கூரை

பதிவுகள் : 378

பதிவின் தரம் : 376

பதிவு விருப்பம் : 268

இணைந்தது : 06/04/2013


V.I.P MEMBER

V.I.P MEMBER
தணிகைப்புராணம்:

முருகப்பெருமான் எழுந்தருளியுள்ள திருத்தணிகை பற்றிய புராணத்தை இயற்றியவர் கச்சியப்ப முனிவர். இவர் திருத்தணியில் சைவ வேளாளர் மரபில் பிறந்தவர். இவரது வித்யாகுரு சிவஞான முனிவர் ஆவார். ஸ்ரீஅம்பலவாண தேசிகரிடம் தீட்சை பெற்றார். திருவானைக்கா புராணம், பூவாளூர் புராணம், பேரூர் புராணம், விநாயகர் புராணம், கச்சி ஆனந்த ருத்திரேசுரர் வண்டுவிடு தூது, பஞ்சாக்கர தேசிகர் அந்தாதி, தணிகையாற்றுப் படை, திருத்தணிகை பதிற்றுப்பத்தந்தாதி என்ற நூல்களையும் இவர் இயற்றியுள்ளார். இதுபோல, காஞ்சிப்புராணம்என்ற நூலின் முதல் காண்டத்தை சிவஞான முனிவரும் இரண்டாவது காண்டத்தை கச்சியப்ப முனிவரும் இயற்றியுள்ளனர்.

சைவ எல்லப்ப நாவலர்:

தொண்டை நாட்டைச் சேர்ந்த சைவ எல்லப்ப நாவலர் அருணாசலப் புராணம், செவ்வந்திப் புராணம், திருவிரிஞ்சைப் புராணம், திருவெண்காட்டுப் புராணம், திருச்செங்காட்டங்குடி புராணம் ஆகியவற்றை இயற்றியுள்ளார். இவர் நாவன்மை மிக்கவர் என்பதாலும், சைவத்தின் மேல் பற்றுக்கொண்டவர் என்பதாலும் “சைவ எல்லப்ப நாவலர்’ என்ற பெயர் பெற்றார்.

பாடுவோர் பற்றி பாடும் நூல்:

புலவர்கள் இறைவனைப் பற்றி புகழ்ந்து பாடுவார்கள். வள்ளல்களையும், மன்னர்களையும் புகழ்ந்து பாடியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட புலவர்களின் புகழை வெளிப்படுத்த புலவர்களைப் பற்றியே பாடும் நூல்

“புலவர் புராணம்’ஆகும். இந்நூலை முருகதாசர் என்னும் தண்டபாணி சுவாமிகள் எழுதியுள்ளார். அருணகிரிநாதர் போல இவர் சந்தங்களுடன் பாடுவதில் வல்லவர். எனவே இவரை “திருப்புகழ் சுவாமிகள்’ என்றும் அழைத்தனர். புலவர் புராணம் 71 இயல்களைக் கொண்டது. 3000 பாடல்கள் உள்ளன. இதில் 70 புலவர்களின் வரலாறு தொகுக்கப்பட்டுள்ளது. தண்டபாணி சுவாமிகளை “நமது காலத்து அருணகிரியார்’ என வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் புகழ்ந்து போற்றியுள்ளார்.தில்லை திருவாயிரம், ஏழாயிரப் பிரபந்தம், திருச்செந்தூர்க் கோவை, திரு மயிலைக் கலம்பகம் ஆகிய நூல்களையும் தண்டபாணி சுவாமிகள் எழுதியுள்ளார்.

இலக்கிய ஒருவரி

1. தணிகையாற்று படை நூலை எழுதியவர்_கச்சியப்ப முனிவர்

2. புலவராற்றுப் படை நூலை இயற்றியவர்_திருமேனி ரத்தினக் கவிராயர்

3. நெஞ்சாற்றுப்படை நூலை செதுக்கியவர்_தொழுவூர் வேலாயுத முதலியார்

4. இறையனாற்றுப் படை ஆசிரியர்_பின்னத்தூர் நாராயணசாமி அய்யர்.

5. தமிழின் முதல் அந்தாதி_அற்புதத் திருவந்தாதி

6. அற்புதத்திருவந்தாதியைப் பாடியவர்_காரைக்காலம்மையார்

7. கந்தர் அந்தாதி எழுதியவர்_அருணகிரிநாதர்

8. அபிராமி அந்தாதி ஆசிரியர்_அபிராமி பட்டர்.

9. திருக்கருவைப் பதிற்று பத்தந்தாதி நூல் எழுதியவர்_அதிவீரராம பாண்டியன்

10. பொன் வண்ணத்து அந்தாதி ஆசிரியர்_சேரமான் பெருமாள் நாயனார்.

7இலக்கியப் பார்வை Empty இலக்கியப் பார்வை – 7 Wed May 22, 2013 4:19 pm

மணல் கூரை

மணல் கூரை
மணல் கூரை

மணல் கூரை

பதிவுகள் : 378

பதிவின் தரம் : 376

பதிவு விருப்பம் : 268

இணைந்தது : 06/04/2013


V.I.P MEMBER

V.I.P MEMBER
திருவாவடுதுறை மடம்:

தமிழ் இலக்கியப் பணியில் சைவமடங்கள் அரும்பணி ஆற்றியுள்ளன. அவற்றில் திருவாவடுதுறை ஆதீனமும் ஒன்று. 14ம் நூற்றாண்டில் நமச்சிவாய மூர்த்திகள் இந்த மடத்தை நிறுவினார். இவர் உமாபதி சிவாச்சாரியார் என்பவரின் மாணவர். நன்னூல் என்னும் இலக்கண நூலுக்கு உரை எழுதிய சங்கர நமச்சிவாயர், சிவஞானமுனிவர் ஆகியோர் திருவாவடுதுறை மடத்தைச் சேர்ந்தவர்கள். மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் ஆகியோரை இந்த மடம் ஆதரித்தது. இம்மடத்தைச் சேர்ந்த சிவஞான முனிவர் எழுதிய ”சிவஞான போதகம்’ என்னும் நூல், சைவ சித்தாந்த நூல்களிலேயே மிகவும் உயர்ந்தது. பல ஆய்வாளர்களால் போற்றப்பட்டது. இப்போதும் பல தெய்வங்களைப் பற்றிய அரிய வரலாற்று நூல்களை இந்த மடம் வெளியிட்டு வருகிறது. இவர் திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் அவதரித்தார். அங்கு அவருக்கு தம்பிரான் துறை படித்துறையில் கோயில் உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் குரு அனுக்கிரகம் பெற்று, இந்நூலை எழுதினார்.

தருமபுர மடம்:

தருமபுர மடத்தை 14ம் நூற்றாண்டில் குருஞானசம்பந்த தேசிகர் நிறுவினார். ஸ்ரீமாசிலாமணி தேசிகர், வெள்ளியம்பலவாணர், படிக்காசு புலவர் ஆகியோர் இந்த மடத்தைச் சேர்ந்தவர்கள். தேவார திருமுறை உரை, திருக்குறள் உரை வளம் என்ற நூல்களை இந்த மடம் வெளியிட்டுள்ளது.

திருப்பனந்தாள் மடம்:

காசியில் குமரகுருபர சுவாமிகள் குமாரசுவாமி மடத்தை நிறுவினார். அந்த மடத்தைச் சேர்ந்த ஸ்ரீகாசிவாசி தில்லைநாயக சுவாமிகள், திருப்பனந்தாள் மடத்தை, 1720ம் ஆண்டில் நிறுவினார். குமரகுருபர சுவாமிகள் பிரபந்தத் திரட்டு, கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தங்கள், திருக்குறள் உரைக்கொத்து, பன்னிரு திருமுறைகள், பெரிய புராணம், திருவிளையாடல் புராணம், கந்த புராணம் ஆகிய நூல்களை இந்த மடம் வெளியிட்டுள்ளது. க.வெள்ளை வாரணனார் எழுதிய பன்னிரு திருமுறை வரலாறு, நீ. கந்தசாமி பிள்ளை எழுதிய “திருவாசகம்’ ஆகிய நூல்களை அண்ணாமலை பல்கலைக்கழகம் சார்பில் இந்த மடம் வெளியிட்டது.

மதுரை மடம்:

இன்றுள்ள சைவமடங்களிலேயே மிகவும் பழமையானது மதுரை மடம் ஆகும். இதை “திருஞான சம்பந்தர் திருமடம்’ என்றும் அழைப்பர். சைவத்தைக் காக்க மங்கையர்க்கரசியார் என்ற அரசியின் அழைப்புக்கு ஏற்ப ஞானசம்பந்தர் மதுரை வந்தபோது, இந்த மடத்தில் தங்கியிருந்தார். எனவே, பெருமைக்குரிய மடமாக இது திகழ்கிறது.

8இலக்கியப் பார்வை Empty இலக்கியப் பார்வை – 8 Wed May 22, 2013 4:21 pm

மணல் கூரை

மணல் கூரை
மணல் கூரை

மணல் கூரை

பதிவுகள் : 378

பதிவின் தரம் : 376

பதிவு விருப்பம் : 268

இணைந்தது : 06/04/2013


V.I.P MEMBER

V.I.P MEMBER
மணநூல் என்றால் எது?

சீவகசிந்தாமணி என்னும் காப்பியத்தை எழுதியவர் திருத்தக்கதேவர். இவர் சமணசமயத்தைச் சார்ந்தவர். சீவகன் என்பவனின் வரலாற்றை இந்நூல் விளக்கமாக கூறுகிறது. சிந்தாமணி என்பது கேட்டவர்க்கு கேட்ட பொருளை குறைவில்லாமல் வழங்கும் சிறப்புடைய தெய்வமணியாகும். சீவகசிந்தாமணியில் 13 இலம்பகங்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு இலம்பகத்திலும் சீவகன் அடைந்த பேற்றை விளக்குகிறது.

இந்நூலுக்கு ”மணநூல்’ என்னும் பெயரும் உண்டு. சீவகன் எட்டு மகளிரை மணம் செய்து கொண்டதால் இப்பெயர் ஏற்பட்டது. ஏமாங்கதம் நாட்டில் ராசமாபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவன் சச்சந்தன். இவனது மனைவி விசயை. அமைச்சர் செய்த சூழ்ச்சியால் நாட்டை இழந்த சச்சந்தன் உயிரிழந்தான். கர்ப்பவதியான ராணி விசயை, மயில்பொறி என்னும் விமானத்தில் பறந்து சென்று, ஒரு சுடுகாட்டில் இறங்கினாள். அங்கு ஒரு ஆண்குழந்தையை பெற்றுவிட்டு இறந்து போனாள். அவனை கந்துக்கடன் என்னும் வணிகன் எடுத்து வளர்த்தான். அவனுக்கு “சீவகன்’ என்று பெயரிட்டான்.

அச்சணந்தி என்னும் குருவிடம் கல்வி பயின்றான் சீவகன். காந்தருவதத்தை, குணமாலை, பதுமை, கேமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை என்னும் எட்டுப் பெண்களை திருமணம் செய்தான். பின்னர், தன் முந்தையை வரலாற்றை அறிந்து, அமைச்சரை வென்று நாட்டை மீட்டான். இந்த நூலிலுள்ள நாமகள் இலம்பகம் சீவகன் குருகுலத்தில் படித்தது பற்றியும், மணமகள் இலம்பகம் அமைச்சரை வென்று நாட்டைக் கைப்பற்றியதையும், பூமகள் இலம்பகம் அவன் அரியணை ஏறியதையும், முக்தி இலம்பகம் சீவகன் வீடுபேறாகிய மோட்சம் பெற்றதையும் விளக்குகிறது.

இதுதவிர காந்தருவதத்தையார் இலம்பகம், குணமாலையார் இலம்பகம், பதுமையார் இலம்பகம், கனகமாலையார் இலம்பகம், விமலையார் இலம்பகம், சுரமஞ்சரியார் இலம்பகம், இலக்கணையார் இலம்பகம் ஆகியவை அந்தந்த பெண்களை திருமணம் செய்தது பற்றி விவரிக்கின்றன. சந்திர சூடாமணி, கத்ய சிந்தாமணி ஆகிய வடமொழி நூல்களைப் பின்பற்றி இந்நூல் எழுதப்பட்டதாகும். மேல்நாட்டு அறிஞரான ஜி.யு. போப் இந்நூலைப் பற்றி,”கிரேக்க மொழியில் உள்ள இலியட், ஒடிசி காப்பியங்களுக்கு இணையானது சீவகசிந்தாமணி,” என்று பாராட்டியுள்ளார். வீரமாமுனிவர் திருத்தக்கதேவரை ”தமிழ்ப் புலவர்களின் தலைமைப்புலவர்’ என்று பாராட்டியுள்ளார். பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர், நரிவிருத்தம் என்ற நூலையும் எழுதியுள்ளார்.

9இலக்கியப் பார்வை Empty இலக்கியப் பார்வை – 9 Wed May 22, 2013 4:24 pm

மணல் கூரை

மணல் கூரை
மணல் கூரை

மணல் கூரை

பதிவுகள் : 378

பதிவின் தரம் : 376

பதிவு விருப்பம் : 268

இணைந்தது : 06/04/2013


V.I.P MEMBER

V.I.P MEMBER
நமது புலவர்கள் நமக்காக அருளிச் சென்ற நூல்களைப் பற்றிய விபரத்தை இந்த பகுதியில் சுருக்கமாகப் பார்க்கலாம்.

சிவஞான முனிவர்:

சிவஞான போத பேருரை என்னும் நூலை எழுதியவர் சிவஞான முனிவர். இவர் திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் அவதரித்தார். பெற்றோர் ஆனந்தக்கூத்தர்- மயிலம்மை. இலக்கணம், இலக்கியம், மொழி பெயர்ப்பு, சமயம், புராணம், உரைகள் என அத்தனை வகை இலக்கியங்களையும் ஆக்கி அளித்தவர். அகிலாண்டேஸ்வரி பதிகம், கலசை செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ், சோமேசர் முதுமொழி வெண்பா, திருத்தொண்டர் திருநாமக்கோவை, பஞ்சாக்கர தேசிகர் மாலை, சிவதத்துவ விவேகம், தருக்க சங்கிரக அன்னப்பட்டியம், காஞ்சிப்புராணம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இவரை ஸ்ரீமாதவ சிவஞான யோகிகள் என்று சிறப்பித்துக் கூறுவர். திருத்தணி கச்சியப்ப முனிவர், தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர், காஞ்சி சிதம்பரம் முனிவர் ஆகியோர் இவரது மாணவர்கள். சிவஞான போத சிற்றுரை, சிவஞான சித்தியார் பொழிப்புரை, தொல்காப்பிய முதல் சூத்திர விருத்தி, நன்னூல் விருத்தியுரை, கம்பராமாயண முதல் செய்யுள் சங்கோத்திர விருத்தி ஆகிய உரை நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.

வீரராகவ முதலியார்:

காஞ்சிபுரம் அருகிலுள்ள புதூர் கிராமத்தில் பிறந்தவர் அந்தகக்கவி வீரராகவ முதலியார். “அந்தகம்’ என்றால் “பார்வையற்ற’ என்று பொருள். இவர் பிறவியிலேயே பார்வை இழந்தவர் என்பதால் “அந்தகக்கவி” என்னும் அடைமொழியைப் பெற்றார். சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ், சேயூர்க் கலம்பகம், திருவாரூர் உலா, திருக்கழுக்குன்ற மாலை, சந்திரவாணன் கோவை, கயத்தாற்றரசன் உலா ஆகிய நூல்களை இவர் எழுதியுள்ளார்.

நவீன கம்பர்:

மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை திருச்சியில் பிறந்தவர். இவர் திருவாவடுதுறை மடத்தில் புலவராக இருந்தார். தினமும் இவர் 300 பாடல்கள் பாடியதாகச் சொல்வர். 22 புராண நூல்கள், 10 பிள்ளைத்தமிழ் நூல்கள், பத்து அந்தாதிகள், இரண்டு கலம்பகம், ஏழு மாலை நூல்கள், மூன்று கோவை நூல்கள், ஒரு உலா மற்றும் லீலை நூல்களை எழுதியுள்ளார். இவரை “நவீன கம்பர்’ என்று பாராட்டுவார்கள்.

10இலக்கியப் பார்வை Empty இலக்கியப் பார்வை – 10 Wed May 22, 2013 4:27 pm

மணல் கூரை

மணல் கூரை
மணல் கூரை

மணல் கூரை

பதிவுகள் : 378

பதிவின் தரம் : 376

பதிவு விருப்பம் : 268

இணைந்தது : 06/04/2013


V.I.P MEMBER

V.I.P MEMBER
இடைச்சங்கத்திற்கு செல்வோமா!

தமிழ் ஆய்ந்த இடைச்சங்கம் கபாடபுரம் என்னும் இடத்தில் இருந்தது. கன்னியாகுமரிக்கு தெற்கே நிலப்பரப்பு இருந்ததாகவும், அதில் ஒரு பகுதியே கபாடபுரம் என்றும் சொல்வர். பின்பு, கடலில் மூழ்கி அழிந்து விட்டதாக அறிஞர்கள் சொல்கிறார்கள்.

இங்கிருந்த தமிழ்ச்சங்கத்தை வெண்டேர்ச் செழியன் என்ற மன்னன் முதல், முடத்திருமாறன் என்பவன் வரை 59பேர் வளர்த்திருக்கிறார்கள். இந்த சங்கத்தில் 3700 புலவர்கள் இருந்தனர். அப்போது, பெருங்கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலை அகவல் என்ற நூல்கள் இயற்றப்பட்டன. அந்த நூல்களும் கடலில் மூழ்கி அழிந்துவிட்டன. இந்த சங்க காலத்தில் தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் ழுதப்பட்டது. அது நமக்கு கிடைத்ததற்கு காரணம், யாரேனும் அதை பிரதி எடுத்திருக்க வேண்டும். அது கடல்கோள் ஏற்பட்ட பகுதியில் இருந்து வேறு பகுதிக்கு கொண்டு வரப்பட்டு இருக்கலாம் என்÷ ற எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
இடைச்சங்கத்தில் அகத்தியர், தொல்காப்பியர், வெள்ளூர் காப்பியனார், சிறுபாண்டரங்கனார் என்ற புலவர்கள் முக்கியமானவர்கள். இந்தச் சங்கம் 3700 ஆண்டுகள் இருந்தது.

புறநானூறு பற்றி அறிவோமே!

புறநானூறு என்னும் நூல், காதல் அல்லாத புகழ், வீரம், கொடை உள்ளிட்ட பல பொருட்களைப் பற்றி பாடப்பட்ட நூலாகும். இந்நூலில் 400 பாடல்கள் இருப்பதாக கூறப்பட்டாலும், 267,268ம் பாடல்கள் கிடைக்காததால் 398 பாடல்களே உள்ளன. பல புலவர்கள் இந்த நூலிலுள்ள பாடல்களைப் பாடியுள்ளனர். ஆனால், இவற்றைத் தொகுத்தவர் யார் எனத் தெரியவில்லை. பெருந்தேவனார் என்ற புலவரின் கடவுள் வாழ்த்துப் பாடலுடன் இந்த நூல் துவங்குகிறது. இந்நூலில் அவ்வையாரின் பாடல்கள்(33) அதிகமாக உள்ளன. பாரிவள்ளல் இறந்த பிறகு, அவரது மகள்கள் (பாரி மகளிர்) வருந்திப் பாடிய பாடல் 112வதாக வருகிறது. புறநானுற்றை ஆராய்ந்து பதிப்பித்தவர் டாக்டர் உ.வே.சாமிநாதய்யர்.

இறந்தவர்களை தாழியில் வைத்துப் புதைத்தல், நடுகல் நாட்டுதல், கணவரின் மறைவுக்குப் பிறகு பெண்கள் நகைகளைக் களைதல், உடன்கட்டை ஏறுதல் ஆகிய பழக்க வழக்கங்கள் அக்காலத்தில் இருந்ததை புறநானூறு பாடல்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.
“நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே, மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’ என்று மோசிகீரனார் என்பவர் பாடிய பாடல் இன்றைய உலகத்துக்கும் பொருந்தும். “நெல்லும், தண்ணீரும் மட்டுமல்ல, நல்ல ஆட்சியும் மனிதனுக்கு முக்கியம்’ என்ற பொருளில் எழுதப்பட்ட பாடல் இது.

கணியன் பூங்குன்றனார் எழுதிய “யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பாடல் மிகவும் பிரசித்தி பெற்றது.

பொருநராற்றுப்படை:

பொருநாராற்றுப் படை என்ற நூல் கரிகால் பெருவளத்தான் என்ற புகழ் பெற்ற மன்னனைப் பற்றிப் பாடப்பட்டது. இளவயதில், இவனது எதிரிகள் அரண்மனையில் தீ வைத்ததாகவும், அதனால் இவனது கால்கள் கருகி “கரிகால்’ ஆனதாகவும் சொல்லப்பட்டாலும், இன்னொரு சிறப்பான தகவலும் இருக்கிறது. “கரி’ என்றால் “யானை’. இவன் தன் எதிரிகளை காலில் போட்டு மிதித்தால், யானை துவம்சம் செய்வது போல இருக்குமாம்! இதனால் தான் இந்தப் பெயர் வந்ததாகவும் கூறுவர். இந்த நூலை “முடத்தாமக்கண்ணியார்’ என்ற பெண் புலவர் எழுதியுள்ளார். “முடத்தாமம்’ என்றால் “தாமரை’ எனப் பொருள். தாமரை போன்ற கண்களை உடையவராம் இவர்.

“பொருநர்’ என்றால் “மற்றொருவர் போல வேடம் கொள்ளுதல்’ என்பதாகும். போர்க் களத்து வீரர் போல் வேடமணிந்த ஒருவர், கரிகாலனின் வீரத்தைப் பாடுவது போல், இந்
நூலில் வரிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நூல் 248 அடிகளைக் கொண்டது.

நன்றி – தினமலர்

11இலக்கியப் பார்வை Empty Re: இலக்கியப் பார்வை

Sponsored content

Sponsored content


View previous topic View next topic Go down  Message [Page 1 of 1]

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

Style of Google. Code by SkinOne