திமுக தலைவர் கருணாநிதிக்கு 90வது வயது ஜூன் 3ம் தேதி பிறக்கிறது. இதையொட்டி ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ.மைதானத்தில் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தென் சென்னை மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமை தாங்குகிறார். கட்சி பொதுச்செயலாளர் க.அன்பழகன் பாராட்டுரை வழங்குகிறார்.
கருணாநிதி கலந்து கொண்டு ஏற்புரை வழங்கி பேசுகிறார். இதில் திமுக முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி பேசுகிறார்கள். மேலும், கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதி ஐந்தாம் பாகம் மற்றும் சிறுகதைப் பூங்கா நூல்கள் வெளியீட்டு விழா வருகிற 2-ந்தேதி மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடக்கிறது.
துணை பொதுச் செயலாளர் துரை முருகன் வரவேற்கிறார். சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி எஸ்.மோகன் விழாவுக்கு தலைமை தாங்கி நூல்களை வெளியிடுகிறார். முதல் பிரதியை மா.நன்னன் பெற்றுக் கொள்கிறார். கவிஞர் வைரமுத்து, எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் வாழ்த்துரை வழங்குகிறார்கள். கருணாநிதி ஏற்புரை நிகழ்த்துகிறார்.