சென்னை: பிரியாணி படத்தின் கதையை இயக்குனர் வெங்கட் பிரபு முதலில் விஜய்யிடம் தான் தெரிவித்துள்ளார். அவர் மறுத்த பிறகே அந்த வாய்ப்பு கார்த்திக்கு சென்றுள்ளதாம். வெங்கட் பிரபு அஜீத் குமாரை வைத்து மங்காத்தா படத்தை எடுத்து ரிலீஸ் செய்தார். படமும் ஹிட்டானது.
அதன் பிறகு அவர் பிரியாணி என்ற படத்தை இயக்க தயாரானார். அவர் பிரியாணி கதையை முதலில் இளைய தளபதி விஜய்யிடம் தான் தெரிவித்தாராம். ஆனால் விஜய் அதில் நடிக்க ஒப்புக் கொள்ளாததால் அந்த வாய்ப்பு கார்த்திக்கு சென்றுள்ளது.
கார்த்திக்கு கதை பிடிக்கவே அவர் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். மங்காத்தா ஷூட்டிங்கின்போது அஜீத் படக்குழுவினருக்கு பிரியாணி செய்து கொடுத்ததால் தனது படத்திற்கு வெங்கட் பிரியாணி என்று பெயர் வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது. ஆனால் படத்தின் கதைக்கும் பிரியாணி என்ற பெயருக்கும் தொடர்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.
விஜய் மட்டும் ஒப்புக் கொண்டிருந்தால் அடுத்தடுத்து 2 பெரிய ஹீரோக்களை வைத்து படம் எடுத்த பெருமை வெங்கட் பிரவுக்கு கிடைத்திருந்திருக்கும்.