"மணல் கூரை" - இது தமிழ் பண்பாட்டுக் கூரை! ஒவ்வொரு மனிதனும் முதன் முதலில் எழுதிப் பழகுவது மண்ணில் தான். தரையில் எழுதாத மனிதன் இந்தத் தரணியில் இருக்கவே முடியாது. குழந்தையாக இருந்த போது தரையில் எழுதினோம் ஆனால், இன்று வளர்ந்து ஆளாகி உயர்ந்திருக்கின்றோம் அதனால் இப்போது கூரையில் எழுதுவோம்! |
தமிழன் எங்கு சென்றாலும் தனது பண்பாட்டை மறக்க மாட்டான். எனவே நாமும் முதன் முதலில் எழுதிப் பழகிய மண்ணை மறந்து விடாமல், கூரையில் எழுதினாலும் மண் கூரையிலே எழுதுவோம் என்பதற்காகவே இந்தத் தளத்திற்கு "மணல் கூரை" என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
"மணல் கூரை" என்று கூகுளில் தேடிய போது, இந்தத் தலைப்பில் நேரடியான எந்தத் தகவலும் இடம் பெற்றிருக்கவில்லை. இனிமேல் தேடினால், அதில் நமது தளத்தில் உள்ள கட்டுரைகள் தான் இடம்பெற வேண்டும்.
மணல் கூரை என்றதும் காற்றில் கலைந்துவிடுமோ என்று நினைத்துவிட வேண்டாம். மணல் மட்டுமே காற்றில் கலையும். ஆனால் இது வெறும் மணல் அல்ல, மணல் கொண்டு உருவாக்கப் பட்ட "மணல் கூரை"!
எத்தனை உயரமான கட்டிடத்திற்கும் அதன் உறுதியை நிர்ணயம் செய்வது மணல் தான். மணலோடு சேர்ந்த பல கலவைகள்தான்! எனவே இந்த "மணல் கூரை" தளத்தின் தரத்தினை நிர்ணயம் செய்யப் போவதும் இங்கு இணைந்து எழுதப் போகும் உங்களை வைத்துதான். உங்கள் எழுத்துக்களோடு கலந்துதான் இந்தத் தளம் சிறந்து விளங்க முடியும்.
"மணல் கூரை" என்பது எந்தத் தனிமனிதனின் அடையாளத்தையும் தாங்கி நிற்கப் போவதில்லை. இது தமிழனை மட்டுமே அடையாளம் காட்டும்! தமிழ் பண்பாட்டை மட்டுமே அடையாளம் காட்டும்!
விறுவிறுப்பாக எழுதிக் கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளனின் பேனா நின்று போனால், மை தீர்ந்துவிட்டதோ என்று நினைத்து அந்த எழுத்தாளன் தனது பேனாவை உதறும்போது தெறித்து விழும் மை தரையை நிரப்புவதைப் போல, நீங்கள் உங்கள் சொந்தத் தளங்களில் எழுதிக் கொண்டிருந்தாலும் அவ்வப்போது இந்த மணல் கூரையிலும் உங்கள் எழுத்தை தெளித்துவிட்டு செல்லவும்!
இணைய வெளியில் பறந்து விரிந்து, திரிந்து கொண்டிருக்கும் எழுத்தாளர்களையும், சிந்தனையாளர்களையும் மணல் கூரையில் எழுத அழைக்கின்றோம்.